வெடிக்க வைத்த வெறியர்கள் கதையும்
துடிக்க வைத்த துரோகிகள் கதையும்
முடிக்க வேண்டும் இறைவா உன்னிடம்
வடிக்கும் கண்ணீருடன் வேண்டி அழுகின்றோம்.
சீயாவோ யூதனோ சீ ஐ ஏ ஏஜண்டோ
ஒயாது உயிர்களை ஒழிக்கும் ஐ எஸ்ஸோ
தீயதைச் செய்து தீனை அழிக்கும் இந்த
நாய்களின் கதையை நசுக்குவாய் இறைவா.
கட்டும் குண்டிலே கருகிச் சாகட்டும்
கெட்ட மரணத்தால் கீழ் நிலை அடையட்டும்
சுட்ட கற்களை சுமக்கும் அபாபீல்கள்
ஒட்டு மொத்தமாய் உங்களைத் தாக்கட்டும்
இறைவா இறைவா எங்கள் இறைவா
மறைவான செயல்களை அறிந்தவன் நீயே
மறைதூதர் பள்ளியை மண்ணாக்க முனைந்தோர்க்கு
முறையாக பதில் தருவாய் முறையிடுகிறோம் உன்னிடம்.