அதிபர்களை கல்வி நிருவாக சேவைக்குள் சேர்ப்பதற்கான போட்டிப்பரீட்சை 17ஆம் திகதி...!

காரைதீவு நிருபர்-
லங்கை அதிபர் சேவை தரம் 1ஜச் சேர்ந்த அதிபர்களை இலங்கை கல்விநிருவாக சேவை தரம் 3இற்கு சேவைஅனுபவம் தகைமை அடிப்படையிலான பரீட்சை மூலம் இவ்வாட்சேர்ப்பு செய்வதற்கான செய்வதற்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவிருக்கிறது. 

இலங்கை கல்விநிருவாக சேவை தரம் 3இல் காணப்படுகின்ற பொது மற்றும் விசேடசேவை பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான போட்டிப்பரீட்சை நேற்றுமுன்தினம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 இல் நிலவுகின்ற 852 வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகைமையான உத்தியோகத்தர்களிடமிருந்து மூன்றுமுறைகளில் ஆட்சேர்க்க விண்ணப்பங்களை கல்வியமைச்சு கோரியிருந்தது.
மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை திறந்த பரீட்சை மற்றும் சேவைஅனுபவம் தகைமை அடிப்படையிலான பரீட்சை மூலம் இவ்வாட்சேர்ப்பு இடம்பெறவிருக்கின்றது.

இதில் திறந்த பரீட்சை கடந்தமாதம் கொழும்பில் நடைபெற்றுமுடிந்திருக்கின்றது. ஞாயிறன்று மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை நடைபெற்றறது. சேவைமூப்பிற்கான பரீட்சை 17இல் இடம்பெறும் என கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை!

இ.க.நி.சேவை தரம் 3இல் காணப்படுகின்ற பொது மற்றும் விசேடசேவை பதவிக்கான வெற்றிடங்கள் 515 உள்ளன.குறிப்பாக அவை நாட்டின் தென் சப்பிரகமுவ மத்திய வடமேல் வடமத்திய ஊவா கிழக்கு மற்றும் வட மாகாணத்தில் காணப்படுகின்றன. தகுதியான அதிபர் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கமுடியும். 52வயது வயதெல்லையாகக்கொள்ளப்பட்டது.

எழுத்துப்பரீட்சைஞாயிறன்று இடம்பெற்றது.. சித்தியடைந்தவர்கள் மத்தியில் வாய்மொழிநேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு இடம்பெறும்.

பொதுஊழியர் சேவைக்கு தெரிவாகுபவர்கள் அரசபாடசாலையொன்றில் 3வருடங்கள் கட்டாயம் அதிபர் சேவையாற்றவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

திறந்த போட்டிப்பரீட்சை!

இ.க.நி.சேவை தரம் 3 இல் காணப்படுகின்ற பொதுஊழியர் பொறியியல்தொழினுட்பம் உயிரியல் தொழினுட்பம் தகவல்தொழினுட்பம் ஆகிய பதவிக்கான வெற்றிடங்கள் 219 உள்ளன. தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கமுடியும். 22-32வயதுக்கிடைப்பதாக வயதெல்லை கொள்ளப்படும்.

இதற்கான எழுத்துப்பரீட்சை நடைபெற்றுமுடிந்துள்ளது.மற்றும் வாய்மொழிநேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு இடம்பெறும். 

சேவைஅனுபவம் தகைமை அடிப்படையிலான போட்டிப்பரீட்சை!

இ.க.நி.சேவை தரம் 3இல் காணப்படுகின்ற சேவைஅனுபவம் தகைமை அடிப்படையிலான பதவிக்கான வெற்றிடங்கள் 118 உள்ளன. 05வருடங்கள் தரம் 1 அதிபர் சேவையைப்பூர்த்தி செய்த தகுதிவாய்ந்த அதிபர்கள் விண்ணப்பிக்கமுடியும். 55வயது வயதெல்லையாகக்கொள்ளப்படும்.
எழுத்துப்பரீட்சை மற்றும் வாய்மொழிநேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு இடம்பெறும்.

இம்மூன்றுவகை வெற்றிடங்களுக்குமான மேலதிக விபரங்கள் கடந்த 01.01.2016 அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -