திருகோணமலையில் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் படுகாயம் சாரதி கைது..!

எப்.முபாரக்-
திருகோணமலை, மொறவெவ மற்றும் சம்பூர் பொலிஸ் பிரிவுகளில், நேற்று திங்கட்கிழமை(11) இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில், மூன்று வயது சிறுவன் மற்றும் ஆசிரியையொருவரும் படுகாயமடைந்தது, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், விபத்துகளுடன் தொடர்புடைய சாரதிகள் இருவரையும் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்த ஆசிரியை, திருகோணமலை, நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.தீபராணி (37 வயது) என மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து, வவுனியா நோக்கிச்செல்வதற்காக வேகமாக வந்த வேனும் மஹதிவுல்வெவ பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் நொச்சிக்குளம் பகுதியில் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

வேனின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பூர் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த 03 வயது சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த சிறுவன், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இவ்வாறு படுகாயமடைந்த சிறுவன் மூதூர், சேனையூர் பகுதியைச்சேர்ந்த ஜே.லுக்ஸான் (03 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -