மலேசியாவின் மிகப் பெரிய தனியார் பல்கலைக்கழகமாக விளங்கும் முகாமைத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்திற்கும் BATTICALOA CAMPUS க்கும் இடையில் இன்று உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இன்று மலேசியா ஹில்டன் ஹோட்டலில் இந் நிகழ்வு இடம் பெற்றதுடன் இந்த பல்கலைகழகத்திடமிருந்து பொறியியத்துறை, மருத்துவத்துறை, முகாமைத்துவம் உட்பட பல்வேறுபட்ட துறைகளின் ஊடாக அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இதனடிப்படையில் மலேசியாவுக்கான உத்தியோர்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புழ்ழாஹ் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.
இந்த நிகழ்வில் 67 நாடுகளில் 40000 மாணவர்கள் கல்வி கற்கும் இந்த பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் சுக்ரி அவர்களும் அதனுடைய பிரதித் தலைவர் பேராசியார் டாக்டர் கதீபி அவர்களும் இராஜாங்க அமைச்சர் MLAM ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் மட்டகளப்பு கெம்பஸ் இன் உப வேந்தர் டாக்டர் SM இஸ்மாயில் அவர்களும் இந்த உடன் படிக்கையில் கைச்சாத்திட்டனர்.