ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கொழும்பு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இஸ்லாமிய தின நிகழ்வும் அல்-பிக்ர் இதழின் 10 வெளியீடும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் கேட்போர் கூடத்தில் மஜ்ஜிலிசின் தலைவர் ஏ.எஸ்.எம்.பாஹிமின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (04) இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேன்முறையீட்டு நீதிமன் நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் கலந்து கொண்டிருந்தார். இதன்போது இஸ்லாமிய நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அல்-பிக்ர் இதழின் சிறப்புப் பிரதியை முஸ்லிம் மஜ்லிசின் தலைவர் எஸ்.எம்.பாஹிமிடமிருந்து புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்வதையும், சஞ்சிகை ஆசிரியர் முன்சீர் மஃறூபும் அருகில் காணப்படுகின்றார்.