கிழக்கு மாகாணத்திற்கான CE , CB நிதியில் இருந்து சுகாதார அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடல்..!

கிழக்கு மாகாணத்திற்க்கான CE , CB நிதியில் இருந்து சுகாதார அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடல் இன்று (6) கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் திருகோணமலை மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ,மாகாண சுகாதார அமைச்சின் ஆலோசகருமான சட்டத்தரணி கௌரவ ஜே.எம்.லாகீர் உரையாற்றுகையில் மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கும் அதிகாரிகளான உங்களுக்கும் இடையில் நல்ல உணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகத்தான் இந்த மாகாணத்தை கட்டியெழுப்ப முடியும் மத்திய அரசின் சுகாதார அமைச்சரான கௌரவ Dr.ராஜித சேனாரத்ன அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அமைச்சர் இந்த அமைச்சின் கீழாக சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ பைசல் காசீம் அவர்கள் இருகின்றார்கள்.

பிரதி அமைச்சர் பதவியேற்ற பின்னர் திருகோணமலை மாவட்ட விஜயத்தின் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ A.L.நஸீர், வைத்திய அதிகாரிகள் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் இங்குள்ள அனைவரும் வைத்தியசாலைகளுக்கு நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து அறிக்கைகளாக பெற்று அதிலுள்ள தடைகளை நாங்கள் மிகவும் நுட்பமாக பேசித்தீர்க்க வேண்டிய தேவை இருக்கிற நிலையில் ௦6 மாதங்கள் கடந்து விட்டது. 

இனிமேலும் கால தாமதம் இன்றி செயற்படவேண்டும். அறிக்கைகளாக தயார் செய்யப்பட்ட நிலையில் இருகின்ற ஆவணங்களை பயன்படுத்தி அரச அதிகாரிகளாகிய நீங்கள் வினைத்திறனோடு செயற்பட்டு, அரசியல் பிரமுகர்களாகிய நாங்களும் உங்களுடன் இணைந்து இந்த மாகாணத்தின் சுகாதாரத்தை கட்டியெழுப்பி, நோயற்ற மாகாணமாகவும், சுகாதாரத்தில் வளமுள்ள மாகாணமாகவும் கட்டியெழுப்புவோம் எனக் குறிப்பிட்டதுடன். 

இந்நிகழ்வில் பங்குபற்றிய சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ பைசல் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ A.L.நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் R.M.அன்வர், பிரதி பிரதம செயலாளர், சுகாதார பணிப்பாளர், கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர், உதவிச்செயலாளர் ,பிராந்திய பணிப்பாளார்கள், திட்டமிடல் வைத்திய அதிகாரிகள் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகள் அனைவருக்கும் மாகாணப் பிரதிநிதி என்ற வகையில் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -