மூன்று மாதங்களுக்கு முன்னரும் ஆண் ஒருவருடன் இருந்தது, பொரல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து, பின்னர் இருவரும் சமாதானத்திற்கு வந்திருந்தோம்.
நேற்றிரவு இன்னுமொரு ஆணுடன் வீட்டில் தனியாக இருந்தார். அந்த நபர் பின்புற மதில் சுவரில் ஏறி குதித்து தப்பிச் சென்றார்.
சுசந்திகா வீட்டின் முன் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து என்னை திட்டிவிட்டு, முன்பக்க மதில் சுவரில் ஏறி வெளியில் குதித்து விழுந்து நேராக பொலிஸ் நிலையத்திற்கு ஓடிச் சென்றார்.
தப்பியோடிய நபரின் உடைகள் இருந்த பொதியையும் அடையாள அட்டையையும் நான் பொலிஸாரிடம் ஒப்படைத்தேன்.நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு எனக்கு நியாயத்தை வழங்கியது என சுசந்திகாவின் கணவர் கூறியுள்ளார்.
வெலிவேரிய எம்பருவெல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டில் வைத்து சுசந்திகா ஜயசிங்கவை அவரது கணவர் தம்மிக்க நந்தகுமார நேற்று தாக்கியுள்ளார்.
அதிகாலை ஒரு மணியளவில் சுசந்திகாவின் வீட்டுக்கு சென்ற நந்தகுமார, வீட்டிற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரையும் சேதப்படுத்தியுள்ளார்.
மது போதையில் வீட்டிற்கு வந்த தனது கணவர் தான் தவறாக ஏதேனும் செய்கிறேனா என்று அறிந்து கொள்ள வீட்டின் ஜன்னலை தட்டியதாகவும் கதவை திறந்து வெளியில் வந்த தன்னை நிர்மாணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தும் உபகரணத்தை கொண்டு தாக்கியதாகவும் சுசந்திகா கூறியுள்ளார்.
எனக்கு சொந்தமான வீடுகளை நான் எனது கணவரின் பெயருக்கு எழுதி வைத்தேன். அவற்றை எனக்கு தர மறுத்து வருகிறார்.
இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவம் ஒன்று நடந்து, இணக்க சபைக்கு சென்று அந்த பிரச்சினையை தீர்த்து கொண்டோம்.
சேர்ந்து வாழ முடியாவிட்டால், பிரிந்து செல்வதே சிறந்தது என சுசந்திகா ஜயசிங்க கூறியுள்ளார்.