உதய கம்மன்பில திடீரென கைது செய்யப்படவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில திடீரென கைது செய்யப்படவில்லை எனவும், அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் பீ. ஹெரிசன் தெரிவித்துள்ளார். 

அனுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். 

அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கொள்வனவு செய்த ஒரு இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான தனிப்பட்ட பங்குகளை மோசடியான முறையில் விற்பனை செய்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணைகளுக்கு அமைய உதய கம்மன்பில, ஜயம்பதி கிளரி பெரேரா ஜயசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

இதன்படி சந்தேகநபர்கள் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  எது எவ்வாறு இருப்பினும் உதய கம்மன்பில கைது செய்யப்பட்ட விதம் சட்ட ரீதியானதல்ல என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -