கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கணேமுல்லவை சேர்ந்த சட்டத்தரணி பி.லியனாராய்ச்சி என்பவரே மனுதாரராவார்.
சம்பூர் மகாவித்தியாலயத்தில் முதலமைச்சர் நடந்து கொண்ட விதத்தால் கடல் படை அதிகாரி ஒருவரும், குறித்த பாடசாலை மாணவர் ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர், இவர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டுள்ள மனுதாரர் பிரதிவாதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோரை குறிப்பிட்டு உள்ளார்.
இதனால் இருவரிடமும் முதலமைச்சர் மன்னிப்பு கோரி இருவருக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.