ரமழானை முன்னிட்டு நேற்றைய தினம் முசலி பிரதேசத்தில் வசிக்கும் வறிய மக்களுக்கான உலருணவுப் பொதிகளை வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்கள் வழங்கி வைத்தார்.
அன்றாடம் கூலி வேலைகளுக்கு சென்று உழைக்கும் வறிய குடும்பங்களின் நோன்பு காலங்களில் அவர்களது சுமைகளினை சற்று குறைக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான உலருணவுப் பொதிகளை அமைச்சர் ரிசாத் வதியுதீனின் தம்பியும் வடமாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன் அம் மக்களிடம் கையளித்தார்.
இதன்போது அம் மக்களுக்கு தனது ரமலான் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.