கொழும்பு மாவட்டத்தின் குப்பைகள் அகற்றப்படுகின்றன..!

 மினுவாங்கொடை நிருபர்-
கொழும்பு மாவட்டத்தின் வெள்ள அனர்த்தத்தின் பின் பாதையோரங்களில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் விசேட வேலைத் திட்டம் நேற்று காலை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் மத்திய நிலையம் அங்கொடை ரி.பி.இலங்கரத்தன மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இராணுவம், பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு என்பவற்றைச் சேர்ந்த சுமார் 500 பேர் இப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மேல் மாகாணத்தைச் சேர்ந்த அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்ட டிப்பர், டிரக்டர், குப்பை சேகரிக்கும் இயந்திரம், மின்சாரத் தடைகள் ஏற்படுவதைச் சீர்செய்யும் வகையிலான நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பணிகளில் இணைக்கப்பட்டுள்ளன. 

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா குப்பை அகற்றும் மத்திய நிலையம் செயற்படும் அங்கொடை ரி.பி.இலங்கரத்ன மைதானத்துக்கு நேற்று விஜயம் செய்து குப்பைகள் அகற்றும் பணிகளை ஆரம்பித்துள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இரண்டு தினங்களில் கொழும்பு மாவட்டத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென இதன்போது அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -