அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக ஏ.ஆர்.எம்.ஜிப்ரி

பிரபல ஊடகவியலாளரும், அதிபருமாகிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரி கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனையைப் பிறப்பிடமாக கொண்ட இவர், பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி, பாணந்துறை அல்-பஹ்ரியா மத்திய கல்லூரி, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி ஆகிய 1 ஏபீ தரப் பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். கல்வி இளமாணி (சிறப்பு), கல்வி முதுமாணி, விசேட கல்வி டிப்ளோமா, விவசாய டிப்ளோமா ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ள இவர், கடந்த 2010 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இலங்கை கல்வி நிர்வாக சேவையிலும் நியமனம் பெற்றுள்ளார். 

இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை என்பனவற்றின் பழைய மாணவராவார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -