மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின்போது ரோஹித அபேகுணவர்தன, மற்றும் திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீயானி விஜேவிக்ரம ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை (24) கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது, இரும்பு தடைவேலியில் சிக்கியதன் காரணமாக முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவும், கீழே வீழ்ந்ததன் காரணமாக ஶ்ரீயானி விஜேவிக்ரமவும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஆர்ப்பாட்டத்தின்போது இரும்பு தடைவேலியில் இடறி வீழ்ந்த ரோஹித குணவர்தன தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.