மஹிந்தவின் பாதுகாப்புக்கு தொடர் ஆப்பு...!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்தவின் பாதுகாப்பிற்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த கேர்ணல் மகேந்திர பெர்னாண்டோ, நெருக்கமான பாதுகாப்பு உத்தியோகத்தரான மேஜர் நெவில் வன்னியாரச்சி உள்ளிட்ட ஐந்து உயர் இராணுவ அதிகாரிகள் மஹிந்தவின் பாதுகாப்பு பணிகளிலிருந்து நேற்று வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன்படி, மஹிந்தவிற்கு வழங்கப்பட்ட மொத்த இராணுவப் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக வாபஸ் பெறப்பட்டனர்.

மஹிந்தவின் ஜப்பான் விஜயத்தைத் தொடர்ந்து இந்த உயர் இராணுவ அதிகாரிகள் இராணுவத் தலைமையகத்திற்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர். DC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -