முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மேலும் மூவர் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தப்படாமல் இருந்த 1420 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளும் வகையில் தொடுக்கப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரத்தை மீள்திருத்தம் செய்வதற்கு கொழும்பு வர்த்தக நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாபா மற்றும் காமினி செனரத் ஆகியோர் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகளுக்கான கட்டணம் செலுத்தாமல் இருப்பதாக இவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.