நாடாளுமன்றம், சபாநாயகர் தலைமையில், இன்று பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, ஒலிவாங்கிகளும் செவிப்பணிகளும் செயலிழந்தமையால், சபை நடவடிக்கைகள், நாளை வியாழக்கிழமை (09) காலை 9.30 மணஜவரை ஒத்திவைக்கப்பட்டன.
சபை அமர்வின் போது, பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இணங்க, பிற்பகல் 1.30க்கு வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போதே, ஒலிவாங்கிகளும் செவிப்பணிகளும் செயலிழந்தன. இதனையடுத்து, சபை அமர்வுகளை 5 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.
5 நிமிடங்கள் கடந்த நிலையில், சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், , ஒலிவாங்கிகளும் செவிப்பணிகளும் இயங்கவில்லை. இதனால், சபை நடவடிக்கைகளை நாளை வரை, சபாநாயகர் ஒத்திவைத்தார்.