இ.அ.ஸிறாஜ்-
புனித நோன்பை முன்னிட்டு கட்டார் அல் மீஸான் நலன்புரி அமைப்பின் நிதியுதவியின் மூலம் பாலமுனை பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களை சேர்நத சுமார் 50க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
கட்டார் அல் மீஸான் அமைப்பின் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அல் மீஸான் அமைப்பின் இலங்கை பிரதிநிதிகள் சார்பாக மௌலவி ஏ.எல்.மிஆத், ஆர்.றியான், பி.சம்சுல் மகீன் ஜெலீல், எம்.ஏ.அஸ்ரப் அலி, உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.