முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாவது தலைவராக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டிய, கொலன்ன தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க பூரண தகுதி கொண்டவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.