திருகோணமலை:ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் விளக்கமறியலில்...!

எப்.முபாரக்-
திருகோணமலை – புல்மோட்டை சிங்கள மகா வித்தியாலயத்தில் ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று புதன்கிழமை (08) குச்சவௌி சுற்றுலா நீதிமன்ற நீதவான் பெர்ணான்டோ உத்தரவிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொத்துவில் பகுதியைச்சேர்ந்த ஜானதிலக கருணாசேன (40 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டை பிரதேசத்திலுள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் கற்பித்து வந்த ஆசிரியர் 14 மற்றும் 15 வயது மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக 05 பெற்றோர்கள் மூலமாக மாணவர்கள் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினமான செவ்வாய்கிழமை (07) செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்திருந்தனர்.

அம்முறைப்பாட்டினையடுத்து ஆசிரியரை கைது செய்து விசாரணை செய்த போது மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்திய சம்பவம் தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியருக்கெதிராக இதுவரைக்கும் 05 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இன்னும் சில மாணவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடுகளை மாணவிகள் ஊடாக வழங்கி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -