முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் கிழக்கிற்கு கைமாறப்பட வேண்டும் என்பது நியாயமானதா..?

அஹமட் இர்ஷாட்-
லங்கை முஸ்லிம்களுக்கு அதிலும் மிக முக்கியமாக வடகிழக்கு முஸ்லிம்களுக்கு அரசியல் முகவரியினை கொடுத்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக தலைமையான அஷ்ஷஹீத் அஸ்ரபிற்கு பின்னால் தலைமைத்துவத்தினை கையில் எடுத்த தற்பொழுதைய தலைமையான அமைச்சர் அப்துர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக காலத்திற்கு காலம் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் என்ற வேட்டுக்கள் கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகளினால் தீர்க்கப்படுவது சர்வசாதாரன விடயமாக இருந்து வருகின்றது. 

அதிலும் மிக முக்கியமாக அண்மைகாலம் தொட்டு பல்குழல் துப்பாக்களினை கொண்டு மீண்டும் முஸ்லிம் காங்கிரசின் தலைமக்கு எதிரான கிழக்கிற்கு கைமாறப்பட வேண்டும் என்ற பானியில் வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றது.

இந்த வேட்டுக்கள் காலத்திற்கு காலம் தீர்கப்படுவதில் எந்தளவு நியாயம் இருக்கின்றது? அல்லது வேட்டுக்கள் தீர்க்கப்படுவதினால் தலைமைத்துவம் கிழக்கிற்கு கைமாறப்பட்டுள்ளதா?? தொடர்ந் தேர்சியாக வேட்டுக்கள் தீர்க்கப்படுவதினால் எதிர்காலத்தில் அல்லது நிகழ்காலத்தில் கட்சியின் தலைமைத்துவம் கிழக்கிற்கு கைமாறப்படுமா?? அல்லது இவ்வாறான வேட்டுக்கள் தீர்க்கப்படுவதானது சுயநல அரசியலுக்காகவா??? அல்லது இது ஒரு அரசியல் நாடகமா? என்பதில் பல சிக்கல்களுக்கும் விடை காணப்படாத கேள்விகளுக்கும் மத்தியில் கிழக்கு மாகான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பெரும் தலைவரின் மறைவிற்கு பின்னர் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்ற அப்துர் ரவூப் ஹக்கீமினை எதிர்த்து கட்சியின் ஆரம்ப இஸ்தாபக உறுப்பினர்களான ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ், பெரும் தலைவரின் பாரியார் பேரியல் அஸ்ரப், மர்ஹும் மருதூர்கனி, போன்றவர்கள் கட்சியினை விட்டு வெளியேறி தலைமைத்துவம் கிழக்கிற்கு கைமாறப்பட வேண்டும் என்ற போராட்டத்தில் குதித்த பொழுது பெரும் தலைவரினால் இலங்கை முஸ்லிம்களுக்கு முகவரி கொடுக்கப்பட்டு உறுவாக்கப்பட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கதை முடிந்து விட்டது என்றே பெரும்பான்மை கட்சிகள் பெருமூச்சு விட்ட காலமாக அக்காலம் இருந்தது என்பதில் உண்மைகளே அதிகம். 

இருந்தும் அன்று அனுபவமில்லாத கட்சியின் தலைமையாக இருந்த ரவூப் ஹக்கீம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபிடம் சட்டத் துறையில் ஜூனியராகக் கடமை புரிந்த அனுபவத்தினை கொண்டும், தனக்கிருந்த குறுகிய அரசியல் அனுபவத்தினை கொண்டும் தக்கசமயத்தில் சாதுரியமான முடிவினை எதிர் நீச்சலுடன் கையாண்டு கட்சியினை காப்பாற்றி வழி நாடத்தி ரவூப் ஹக்கீமிற்கு கிடைத்த பாரிய அரசியல் அனுபவத்தினை விடவும் அக்காலகட்டத்தில் தலைமைத்துவம் என்பதில் அவர் கண்ட மாபெரும் வெற்றியாகும். 

இதற்கு கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் பாரிய பங்கு இருந்தது என்பதையும் ஒரு பொழுதும் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் உள்ளம் மறுத்துறைக்க முடியாது என்பதை இங்கு முக்கியமாக சுட்டிகாட்ட விரும்புகின்றேன்.

கிழக்கிலே அன்று தலைமைத்துவத்திற்கு எதிராக பலமுனைகளிலிருந்து பலவாறு கோசங்களும், ஆர்ப்பாட்டங்களும் ஏற்படுத்தப்பட்டாலும் சேகு இச்ஸதீன் மற்றும் அதாவுல்லாஹ் போன்றவர்களின் பீரங்கி மேடை பேசுக்களுக்கு மத்தியில் தலைமையானது அம்பாறை மாவட்டத்தில் பாரளுமன்ற தேர்தலில் களமிறங்கிய பொழுது அம்பாறை மாவட்ட மக்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமினை கட்சியின் தலைமை என்பதனை கருத்தில் கொண்டு கெளரவப்படுத்தி வாக்களித்து SLMC யின் தலைமையினை அம்பாறை மாவட்டத்து பிரதி நிதியாக பாராளுமன்ற கதிரையில் உட்கார வைத்தமையானது தலைமையின் அரசியல் வரலாற்றிலே தலைமைக்கு கிடைத்த அரசியல் வெற்றியாகும்.

இதற்கு பிற்பாடு தலைமையினை எதிர்த்து அம்பாறை மாவட்டத்தின் ஆணிவேராகவும் முஸ்லிம் காங்கிரசின் தாயகமாகவும் இருக்கின்ற கல்முனையின் அரசியல் தலைமையும் தற்போதைய விளையாட்டுதுறை பிரதி அமைச்சருமான ஹரீஸ் தலைமையுடன் முரண்பட்டுகொண்டு அதாவுல்லாவின் அணியிலே முஸ்லிம் காங்க்ரசிற்கு எதிராக போட்டியிட்ட பொழுது தனது அரசியல் முகவரியினை அன்று தொலைத்தமையானது கட்சியின் தலைமக்கு பொறுத்தமானவர் என்று அப்துர் ரவூப் ஹக்கீம் என்பதனை அன்று எடுத்துக்காடியது. 

ஹரீஸ் தான் செய்த தவறினை உணர்ந்து கட்சியின் தலைமையுடன் மீண்டும் இணைந்து செயற்பட்டதினாலேயே அன்று தான் தொலைத்த அரசியல் முகவரியினை இன்றுவரைக்கும் காப்பாற்றிக்கொள்ள முடிந்திருக்கின்றது.

இது ஒரு பக்கம் இருக்க தற்போதைய தலைமையான அமைச்சர் அப்துர் ரவூப் ஹக்கீமினை எடுத்துக்கொண்டால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் கட்சி உறுவாக்கப்பட்ட ஆரம்ப கால கட்டத்தில் சட்டத் துறையில் ஜூனியராகக் கடமை புரிந்த அனுபவத்தினை கொண்டும். 

அந்த இளம் சட்டத்தரணியின் துறைசார் ஆற்றல் பற்றி மிகச் சரியான ஒரு கணிப்பைக் கொண்டிருந்தார். எனினும் தானும் அந்த அரசியல் இயக்கத்தில் இணையப் போகின்றேன் என்று அஷ்ஷஹீத் அஸ்ரப் அவர்களிடம் தெரிவித்த ரவூப் ஹக்கீமின் விருப்பமானது அஷ்ரப் அவர்களை அன்று ஒரு வகையில் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியே இருந்தது. 

ஏனென்றால் அரசியலில் நுழைகின்ற எல்லோருமே தங்களுக்கான பாராளுமன்ற இருக்கை பற்றிய ஒரு கற்பனை வரைபடத்தைக் கீறிக் கொண்டே அதில் காலடி எடுத்து வைப்பது பெரும்பாலும் வழக்கத்தில் இருப்பது நிதர்சனம் என்றபடியினாலாகும்..

அதிலும் முக்கியமாக மத்திய மாகாணத்தைச் சேர்ந்த அந்த இளம் சட்டத்தரணியானவர் அங்கு கவர்ச்சிகரமான தலைமையாகத் திகழ்ந்த ஏ.ஸீ.எஸ். ஹமீடின் அதிகாரம் மிக்க அமைச்சுப் பதவியாலும் ஆங்கிலப் புலமையாலும் கவரப்பட்டிருக்க வேண்டியதே முறையானதும் முக்கியமான விடயமுமாகும். 

அத்துடன் அன்று இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களின் அரசியல் கட்சியாக ஐ.தே.க.வையே கருதியவர்களாக காணப்பட்டனர். எனவே இயல்பாகவே மத்திய மாகாணத்தில் அரசியலுக்குப் புதியவர்கள் யாராவது அதிலும் முக்கியமாக முஸ்லிம்களிலிருந்து ஐ.தே.கட்சியினூடாக அரசியலில் கால் வைப்பதென்றால் ஏ.ஸீ.எஸ். ஹமீட்டின் தோளில் ஏறி நின்றே தங்களின் உயரத்தை வெளியுலகுக்கு காட்ட வேண்டும் என்பதே அப்போது எழுதப்படாத விதியாக காணப்பட்டது.

அதனால் 1990 ஆம் ஆண்டு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டின் போது ரவூப் ஹக்கீம் என்ற அந்த இளைஞனை கட்சியின் பொதுச் செயலாளராக பெரும் தலைவர் அஸ்ரப் அவர்களினால் அறிவிக்கப்பட்டார். 

அந்த நேரத்திலே கருமை நிறத்துடனான தாடியுடன் காணப்பட்ட ரவூப் ஹக்கீம் எனும் அந்த இளைஞனை கிழக்கு மாகாணத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி சபையிலே வீட்டிருந்த கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்தது கொண்டிருந்தனை அவதானிக்க கூடியதாக இருந்தது என ஒரு கட்சியின் செயலாளர் நாயகமான ஹசன் அலியிடம் உரையாடிக் கொண்டிருந்த வேலையின் தெரிவித்தார்.

1994 ஆம் ஆண்டின் பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் மு.கா ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றம் பெற்ற வேலையில் அன்று முதன் முதலாக மிகவும் எதிர்பார்ப்புடன் பெற்றுகொள்ளபட்ட தேசியப் பட்டியல் உறுப்புரிமையை பெருந்தலைவர் அஷ்ரப், ரவூப் ஹக்கீமுக்கு வழங்க முன் வந்து வழங்கி வைத்தமையானது எதிர்காலத்தில் தனது மரணத்திற்கு பிற்பாடு பிரதேசவதத்திற்கு அப்பாற்பட்டு கட்சியினை அகில இலங்கை ரீதியில் தூகி நிறுத்தி பெரும்பான்மை கட்சிகளோடு பேரம் பேசி நாடிலே அரசாங்கத்தினை நிறுவக்கூடிய கட்சியாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை வழி நடாத்த கூடிய திறமையும், தலைமைத்துவத்திற்கு கட்டாயமாக இருக்கின்ற சானக்கியமும் அப்துர் ரவூப் ஹக்கீமிடம் இருக்கின்றது என்பது இனம் காணப்பட்டதினாலாகும்.

அது மட்டுமல்லாமல் எத்தனையோ சிரேஸ்ட்ட உறுப்பினர்கள் கட்சியில் எம்.பிக்களாக இருக்கத்தக்க பாராளுமன்ற உப சபாநாயகருக்கு அடுத்த அந்தஸ்திலுள்ள பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியானது ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டு பெரும் தலைவர் அஸ்ரப்பினால் அழகுபார்க்கப்பட்டது. 

இந்த இரு நியமனங்களுக்கும் பின்னர் ஏற்பட்ட கட்சிக்கு எதிரான பல்வகையான சவால்களை விரட்டியடிப்பதற்கு ரவூப் ஹக்கீமின் தன்னிகரில்லா திறனும் உழைப்பும் பெரும் தலைவர் அஸ்ரப்பிற்கு பெரிதும் உதவியாக இருந்தது என்பதில் இன்றுவரைக்கும் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களிடத்தில் மாற்று கருத்துக்களை காணக்கூடியதாக இல்லை.. 

ரவூப் ஹக்கீமிற்கு வழங்கப்பட்ட இரண்டு நியமனங்களாலும் பெரும் தலைவர் அஸ்ரப் அப்போது பூரண திருப்தியுடன் காணப்பட்தாக ஆரம்பகால சிரேஸ்ட உறுப்பினர்களாகவும் தற்பொழுது ரவூப் ஹக்கீமினை எதிர்ப்பவர்களாக இருப்பவர்களின் கருத்தாக இருக்கின்மை பெரும் தலைவர் அஸ்ரப் எவ்வாறான நம்பிக்கையினை தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் ஹக்கீம் மீது வைத்திருந்தார் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கின்றது.

பெரும்பான்மை கட்சிகளுக்கே வாக்களித்து வந்த வடகிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் ஓர் அரசியல் விழிர்ப்புணர்ச்சியினை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு அரசியல் முகவரியினை கொடுக்கும் அளவிற்கு முஸ்லிம் காங்கிரசினை பல சொல்ல முடியாத தியாகங்களுக்கு மத்தியில் பெரும் தலைவர் அன்று உறுவாக்கிய பொழுது கட்சியின் தலைமை பதவியில் கைவைப்பதற்கு எவறுக்கும் முடியாதபடியே கட்சியின் யாப்பினை வரைந்திருந்தார். 

பெருதலைவர் அஸ்ரபின் வபாத்திற்கு பின்னாலே கட்சியின் தலைமை பொறுப்பானது ஹக்கீமிடம் கைமாறபட்டமை காலத்தின் தேவையாக இருந்தாலும், பெரும் தலைவர் அஸ்ரப் இன்று வரைகும் உயிரோடு இருந்திருந்தால் கட்சியின் தலைவர் பதவியில் எவறுக்கும் கடுகளவேனும் சீண்டிப்பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருக்காது என்பதே எவறாலும் மறுக்க முடியாத உண்மையாகும். 

அதே போன்றே இன்றைய தலைமையும் கட்சிக்கெதிரான எவ்வாறான சவால்களையும் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றது என்பதனை பல முனைகளிலிருந்து அரசியல் எனும் பல்குழல் துப்பாக்கிகளினால் வேட்டுக்களை தீர்ப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரசின் தலைமையான அப்துர் ரவூப் ஹக்கீமின் அசைக்க முடியாத கருத்தாக இருக்கின்றது.

அந்த வகையிலேயே தற்பொழுது எழுப்பப்பட்டு கொண்டிருக்கும் கிழக்கிற்கு தலைமைத்துவம் கைமாறப்பட வேண்டும் என்ற கோசத்திற்கு அமைவாக கட்சியிலிருந்து ஹிஸ்புல்லா அதாவுல்லா அணியினருக்கு பின்னர் பிரிந்து சென்ற அமைச்சர் ரிசாட் பதுர்டீன் மற்றும் அமீர் அலி, வை.எல்.எஸ்.ஹமீட் போன்றவர்களின் அரசியல் ரீதியான எதிர்பினை கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்றும் இல்லாதவாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை சந்திக்க நேரிட்டது. 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களும் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு எதிராக திரண்டெழுந்திருந்த நிலையில் தபால் மூல வாக்களிப்பிற்கு பின்னரே முஸ்லிம் காங்கிரஸ் தலைமையானது மஹிந்த ராஜபக்ஸ்ச அரசாங்கத்தினை விட்டு வெளியேறி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறீசேனவிற்கு ஆதரவளிக்கும் முடிவினை எடுத்திருந்தது. 

இதனை தங்களுக்கு சாதகமாக பயண்படுத்திக்கொண்ட அமைச்சர் ரிசாட் பதுர்டீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பாடு வந்த பாராளுமன்ற தேர்தலில் என்றும் இல்லாதவாறு அம்பாறை மாவட்டத்தில் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கியது.

உரிய நேரத்தில் ஜனாதிபதி மைத்திரிக்குபால சிறீசேனவிற்கு ஆதரவளிக்க முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் தவறிவிட்டது எனும் தொனிப்பொருளில் தேர்தல் பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டிருந்தாலும் முஸ்லிம் காங்கிரசின் தலைமையானது அம்பாறை மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்களை களமிறக்கி அதில் வெற்றி கண்ட விடயமானது கட்சியின் தலைமைக்கு இருக்கின்ற ஆளுமையினையும், பெரும் தலைவர் அஸ்ரப்பினால் தூர நோக்கு சிந்தனையுடன் அனைத்து சவால்களையும் சாதுரியமான முறையில் சமாலிக்க கூடிய தலைமை என்பதை முஸ்லிம் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி விட்டு சென்றுள்ளார் எனபதை நிரூபித்து காட்டுவதாக அமைந்திருந்தது. 

அது மட்டுமல்லமல் பல சவால்களை எதிர் நோக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமையாக ஓர் ஆசனத்தினை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுவருவதானது வரலாறாக காணப்பட்டாலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அது காணல் நீராகி விடுமோ என்ற நிலையில் இருந்த வேலையில் ஏறாவூரில் தனக்கென ஒரு வாக்கு வங்கியினை வைத்திருக்கும் அலிஷாஹிர் மெளலானாவை கட்சிக்குள் உள்வாங்கிதோடு தக்க சமயத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் அரசியல் ஒப்பந்தத்தினை மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றுவந்த ஆசனத்தினை தக்கவைத்து கொண்டமையானது அப்துர் ரவூப் ஹக்கீமின் அரசியல் சானக்கியம் என்று சொல்வதை தவிர வேறொன்றும் கிடையாது.

முஸ்லிம் காங்கிரசினை உறுவாக்கிய கிழக்கிற்கு என்ன அதிகாரம் இருக்கின்றது என தலைமைக்கு எதிராக வேட்டுக்களை தீர்ப்பவர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருக்காலாம். ஆனால் மறுபக்கத்திலே மாகாணத்தின் முதலமைச்சு பதவியானது ஹாபிஸ் நசிர் அஹமட்டுக்கு வழங்கப்பட்டு கிழக்கின் அதிகாரம் முஸ்லிம்களின் கையிலே இருக்கின்றது. 

விளையாட்டு, சுகாதாரம் என்ற இரண்டு பிரதி அமைச்சுக்கள் அம்பாறை மாவட்டத்தின் கைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி மாகாண சுகாதார அமைச்சும் அம்பாறை மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டசத்தில் இன்னும் தலைமையினால் எவ்வகையான அதிகாரத்தினையும் பதவிகளையும் கிழக்கிற்கு வழங்க முடியும் என்ற கேள்யோடு சேர்த்த நியாயங்களே கட்சியின் தலைமையின் பக்கம் இருந்து கூறப்படும் நியாயங்களாகும். அதில் உண்மையும் இல்லாமல் இல்லை. 

இன்னும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டுமானால் தலைமை பதவி மட்டுமே எஞ்சியிருக்கின்றது. அதனை ஒரு பொழுதும் தான் மேலே சுட்டிக்காடியதை போன்று கட்சியின் தலைமையானது யாருக்கும் விட்டுக்கொடுப்பு செய்யாது என்பதில் திடமாகவே இருக்கின்றது.

அன்மை காலமாக கட்சியின் தலைமையினால் கட்சியின் செயலாளர் ஹசன் அலியின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதாகவும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக கட்சியின் தலைமைக்கு எதிரான வேட்டுக்கள் மீண்டும் சுடர்விட தொடங்கியுள்ளது. கட்சியினை ஆரம்பிப்பதற்கு மிகவும் அரும்பாடுபட்ட அனைத்து இஸ்தாபக உறுப்பினர்களையும் கட்சியின் தலைமையானது திட்டமிட்டு ஓரங்கட்டி தனக்கு சாதகமான புதுமுக இளம் அரசியல் வாதிகளையும் தனக்கு ஜால்ரா அடிக்கும் உயர்பீட உறுப்பினர்களையும் வைத்துகொண்டு தான் நினைத்தபடி என்றும் ஆயுள் கால தலைவராக கட்சியில் இருந்து வருவதற்கான திட்டத்தினையே ரவூப் ஹக்கீம் வகுத்து வருகின்றார் என பரவாலாக குற்றம் சுமத்துகின்றனர். 

மறுபக்கத்திலே அதாவுல்லாவின் கோட்டைக்குள் தவம் என்ற புதுமுக அரசியல்வாதியினை உறுவாக்கி முஸ்லிம் காங்கிரசினை அக்கறைப்பற்றில் கட்சியின் தலைமை மீழ்வளர்ச்சி செய்துள்ளதனை போன்று காத்தான்குடியில் பொறியியலாளர் ஷிப்லி பாரூக், அட்டாளைசேனையில் நசீர், ஆரிஃப் சம்சுடீன், ஏறாவூரிலே அலிஷாஹிர் மெளலான, முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், போன்றவர்களை கட்சிக்குள் உள்வாங்கி அதிகாரத்தினை கொடுத்து மகாண சபையிலும் அழகு பார்த்து முஸ்லிம் காங்கிரசின் அதிகாரத்தினை பிரித்து இளம் தலை முறையினரின் கையில் கொடுத்துள்ளமையானது எதிர்காலத்தில் கட்சியின் தலைமையின் மறைவிற்கு பின்னர் கட்சியினை எவறும் அழித்து விட முடியாதபடி பெரும் தலைவரின் வழியிலே தானும் செயற்படுகின்றேன் என்பதை எடுத்துக்காட்டுக்கின்ற விடயமாக இருக்கின்றது. 

இதற்கு ஒப்புதல் தரும் விடயமாக எவ்வாறான பிரச்சனைகளை கட்சியின் தலைமை எதிர் நோக்கினாலும் இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரசின் தாயக மாவட்டமான அம்பாறை மாவட்டத்திலிருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகான சபை, பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் கடுகளவேனும் பின்னடைவினை சந்திக்கவில்லை என்பது நிரூபிக்கின்றது.

கிழக்கிற்கு தலைமைத்துவத்தினை கொடுப்பதென்றால் யாரிடம் கொடுப்பது? தலைமைத்துவத்தினை கையில் எடுத்து தேசிய மட்டத்தில் பெரும்பான்மை கட்சிகளுடன் பேரம் பேசி முஸ்லிம்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கும் அளவிற்கு கிழக்கு மாகாணத்தில் திறமையான அரசியல் முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதிகள் யார் இருக்கின்றார்கள்? என்ற பாரிய வினா இருக்க தக்க கிழக்கிற்கு தலைமைத்துவம் கைமாறப்பட வேண்டும் என்ற கோசத்தில் என்ன நியாயம் இருக்கின்றது? என்பதுதான் உண்மையான முஸ்லிம் காங்கிஸ் போராலியினதும், படித்து சமயோசிதமாக சிந்திக்க கூடிய மக்களினதும் மிகப்பெரிய கேள்வியாக இருந்து கொண்டிருக்கின்றது.

அரசியலுக்கு அப்பாற்பட்டும், பிரதேச வதத்திற்கு அப்பாற்பட்டும் கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்கள் சிந்திக்க வேண்டும் என்பதே பெரும் தலைவர் அஸ்ரப் அன்று முஸ்லிம் காங்கிரசினை ஆரம்பித்து தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கிய பொழுது மிகவும் அர்ப்பணிப்புடன் சிந்தித்த விடயமாக இருந்தது. அதனை வைத்து பார்க்கின்ற பொழுது முஸ்லிம் காங்கிரஸ் போராலிகளினால் கிழக்கிற்கு தலைமைத்துவம் கைமாறப்பட வேண்டும் என்ற கோசங்களை எழுப்புவதில் எந்த நியாயங்களும் கிடையாது என்பதே உண்மை. 

தலைமைத்துவத்திற்கு இருக்க வேண்டிய பன்புகளான ஆளுமை, சட்டசிக்கல்களை கையாளும் முறைமை, மும்மொழியில் பாண்டித்தியம், சிறந்த பேச்சாற்றல், பிரச்சனைகள் வருகின்ற வேலையில் பொறுமையாக விடயங்களை கையாளுதல், வெளிநாட்டு இராஜ தந்திரிகளோடு கலந்துரையாடும் விதம், பெரும்பான்மை கட்சிகளுக்கு மத்தியில் இருக்கின்ற செல்வாக்கு, இப்படியான பல விடயங்களில் தற்போதைய முஸ்லிம் காங்கிரசின் தலைமை அதிகளவில் அனுபவத்தினை கொண்டிருக்கின்ற நிலையில் எதற்காக கட்சியின் தலைமையானது கிழக்கிற்கு கைமாறப்பட வேண்டும் என்பதே முக்கிய வினாவாக இருக்கின்றது. 

அதே நேரத்தில் கிழக்கிற்கு தலைமைத்துவம் கைமாறப்படுவதென்றால் யார் அதற்கு தகுதியானவர் என்பதை கூறுவதற்கோ அல்லது தலைமைதுவத்திற்கு தகுதியானவர் முன்னுக்கு வருவதற்கோ துணிச்சல் இருக்கின்றதா என்பதானது நான் கடைசியாக சுட்டிக்காட்ட விரும்பும் விடயமாக உள்ளது.

-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

கிழக்கிற்கு தலைமைத்துவம் எதற்காக கைமாறப்பட வேண்டும் என கூறுபவர்களின் நியாயங்கள் சம்பந்தமான எனது ஆய்வுக் கட்டுரை மிக விரைவில் பதிவேற்றப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -