அலவி மௌலானாவின் ஜனாஸா செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும் துக்கத்தையும் அடைந்துள்ளேன் - அமைச்சர் ஹலீம்

இக்பால் அலி

லங்கையின் அரசியல் , சமூப் பரப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலை சிறந்த தொழிற் சங்கவாதியாக மதிக்கப்பட்ட மூத்த அரசியல்வாதியும் முன்னாள் ஆளுநமான அலவி மௌலாவின் ஜனாஸா செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும் துக்கத்தையும் அடைந்துள்ளேன் அதேவேளை அன்னாரது மறுமை வாழ்விலும் சுவனப் புங்காவை அடைய வேண்டும் என இப்புனித றமழானில் மாதத்தில அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன் என்று முஸ்லிம் சமயம், கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

முன்னாள் ஆளுநரும் மூத்த அரசியல்வாதியுமான ஜனாஸா தொடர்பாக முஸ்லிம் சமயம், கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரித்தார்

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;

ஐந்து தசாப்பத காலமாக அரசியலில் அதிக ஈடுபாடையவராக விளங்கினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சி காலத்தில் பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றியவர் கடைசிக்காலத்தில் ஆளுநராக சேவையாற்றி விட்டு ஓய்வு பெற்றார். இவர் இந்நாட்டின் எல்லாயின தொழிலாளர் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் முக்கியமான குரலாக ஓங்கி ஒலித்தவர். அதேவேளை எல்லோரை மதித்துப் பழகும் நல்ல நற்குணங்களைக் கொண்டவர். 

எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் பிரிவால் துயருற்றுள்ள அன்னாரது குடும்பம் மற்றும் அவருடைய நலன்விரும்பிகள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -