இன ஒற்றுமைக்கு வழிகோலும் வகையிலும் இனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் இன ஐக்கியத்தையும் ஏற்படுத்தி சகல இன மக்களினதும் சமய கலாசார விழிமியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரம் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரையாகப் புறப்பட்ட காரைதீவை பிறப்பிடமாகக் கொண்ட ஏ.மகேஸ்வரன் எனும் வேல்சாமி தலைமையிலான 110 பேரைக் கொண்ட யாத்திரை குழுவினர் கடந்த திங்கட் கிழமை சங்கமான்கண்டி பிள்ளையார் ஆலயத்தில் தரித்திருந்து பொத்துவில் உகந்தை மலையை நோக்கி பயணிக்கும் இடத்தில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் எம்.ஏ.பகுர்தீன் தலைமையிலான ஊடகவியலாளர்கள் யாத்திரகர்களுக்கு தாகசாந்தி மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.
இவ்வாறான நிகழ்வொன்று இப் பிரதேசத்தில் நடைபெற்றது இதுவே முதற்தடவை என யாத்திரிகர்களுக்கு தலைமை வகித்து செல்லும் வேல்சாமி தெரிவித்தார்.