பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்க்ஷ உள்நாட்டில் பொய்கள் சொல்லி திருப்தியடையாததால் வெளிநாடுகளுக்கு சென்று பொய் சொல்லத் தொடங்கிவிட்டதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்தல விமானநிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல் மூன்று மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டு விட்டதாகவும், ஆனால் அங்கு இன்னும் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக ஜப்பான் சென்றுள்ள மஹிந்த தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை மத்தல விமானநிலையத்தில் 4000 மெட்றிக் தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.