அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை. மொறவெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் தப்பான நடத்தையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் தாயையும் மகனையும் இன்று (04) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொறவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான தாயும் 28 வயதான மகனுமே எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது தாயாரான இப்பெண் கணவரை பிரிந்து கணவரின் உறவினரின் வீட்டில் வசித்து வந்நதாகவும் 28 வயதான மகன் கன்தளாய் பிரதேசத்தில் இருந்ததாகவும் பின்னர் தாயாருடன் சேர்ந்து மொறவெவ பிரதேசத்தில் வாழ்ந்து வந்ததாகவும் ஆரம்ப கட்ட விசிரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து தாயும் மகனும் ஒரே வீட்டில் வசித்து வந்தபோது தகப்பனின் உறவினரால் தப்பான நடத்தையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இதேவேளை தாய்க்கும் மகனுக்கும் தவறான விடயம் இது என தெரியப்படுத்திய வேளை வீட்டை விட்டு புறப்பட்டுச்சென்றுள்ளனர். அதனையடுத்து தனிமையான வீடொன்றினை வாடகைக்கு பெற்று வாழ்ந்து வந்தனர்.
48 வயது பெண்ணின் கணவரின் உறவினரால் மொறவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இருவரையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது தாயும் மகனும் தப்பான நடத்தையில் ஈடுபட்டு வந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஐர்படுத்தவுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.