”பஷீரின் அதிரடி முடிவை வரவேற்கின்றேன் ”

பிரிதிநிதித்துவ அரசியலிலிருந்து தான் விலகிக்கொள்வதாகவும் இனிமேல் நாடாளுமன்றத்திற்கு அல்லது மாகாண சபைக்கோ குறிப்பாக தேசிய பட்டியல் பிரதிநிதியாகவோ செல்லப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அதிரடியாக அறிவித்திருப்பது கட்சிக்குள் மற்றவர்களுக்கும் இடங்கொடுக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் என்றால் அதனை நான் தனிப்பட்ட முறையில் வரவேற்கிறேன்.

என முஸ்லிம் காங்கிரசின் முன்னால் பொதுச் செயலாளரும் உயர்பீட, அரசியல் விவகார பணிப்பாளருமான சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பதவி பட்டங்கள் எல்லாம் எப்போதும் எல்லோருக்கும் அவ்வப்போது சமமாகப் பிரித்து வழங்கப்படவேண்டும் யன்றி மீண்டும் மீண்டும் ஒரு சிலருக்குத் தான் அப் பதவிகள் கொடுக்கவேண்டும் என்ற கோட்பாட்டை மாற்றி மற்றவர்களுக்கு உதாரணமாகவும் படிப்பினையாகவும் அமைய வேண்டும் என்ற கருத்தினை அவர் கொண்டிருப்பது ஒரு நல்ல முடிவாகத்தான் நாம் பார்க்கிறோம்.

நீண்ட காலமாக கட்சிக்குள் இருந்து தவிசாளர் என்ற வகையில் பல தடவைகள் தேசிய பட்டியல் எம்.பி ஆகவும் பிரதி அமைச்சராகவும், அந்தஸ்த்தற்ற அமைச்சராகவும் பின்பு அந்தஸ்துள்ள அமைச்சராகவும் அத்தோடு கிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சித் தலைவராகவும் இக்கட்சி மூலம் தான் தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளார் என்ற உண்மை எமக்கெல்லாம் தெரிந்தது தான். அதற்காக அவர் என்றென்றும் எல்லோருக்கும் ஏணியாக இக்கட்சிக்கு நன்றியுடையவராக எதிர்காலத்திலும் இருந்துவருவார் என நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம்.

அவர் தனது அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இதற்குப் பின் கட்சியிலிருந்து கொண்டு இக் கட்சியை தூய்மைப்படுத்துவதற்காக தான் பாடுபடப்போவதாகவும் கூறுகின்றார்.அப்படியென்றால் முக்கியமான நீங்கள் எல்லோரும் சேர்ந்து தான் அதற்கான களங்கப் படுத்தி அழூக்காக்கிய பொறுப்பையும் கூட்டாக ஏற்றுக்கொள்ள வேண்டுமேயன்றி மாறாக ஒரு தனிமனிதனுக்கு எதிராக உங்களின் சுட்டு விரல்களை சுட்டிக்காட்டுவதை இன்றைய அரசியல் சூழ்நிலையில் தவிர்த்துக்கொண்டு தற்போதுள்ள தேசிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் முஸ்லிம்களுக்கான முக்கிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நீங்களும் தான் பொறுப்புடன் முயற்சிக்கவேண்டும். அது உங்கள் கடமையும் தார்மீக பொறுப்புமாகும். எனவும் சட்டத்தரணி கபூர் அவர்கள் அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -