கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய விமான ஓடுபதையின் திருத்த வேலைகளுக்காக எதிர்வரும் 2017 ஜனவரி 06 ஆம் திகதி முதல் 2017 ஏப்றல் 06 ஆம் திகதியுள்ள மூன்று மாத காலத்துக்கு பகல் வேளையில் மூடப்பட்டிருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
இவ்வாறு இப்பாதைகள் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரையில் மூடப்படவுள்ளது.
இவ்வாறு மூடப்படுவதனால் விமான நிலையத்துக்கு பாரிய இழப்பு ஏற்படும் எனவும், இதற்கு தமது பாரிய எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.