வெளி மாவடடத்தில் இருந்து அத்துமீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களினால் வடமராட்சி கடல்பகுதியில் கரைவலை மற்றும் ஏனைய வலைகள் மூலம் தொழிலில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்களின் வலைகள் இவ்வாறு அத்து மீறி தொழிலில் ஈடுபடுகின்ற வெளிமாவடட மீனவர்களின் செயற்பாட்டால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டு வந்தன மிக நீண்ட காலங்களாக நிலவி வந்த இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக யாழ் மாவடட அரசாங்க அதிபர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இணைந்து மருதங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் வடமராட்சி மீனவர் சங்க ,சமாச மற்றும் சம்மேளன பிரதிநிதிகளையும் வெளி மாவடட மீனவப்பிரதிநிதிகளையும் இணைத்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது .
மேற்ப்படி கலந்துரையாடலில் யாழ் மாவட்ட மீனவச ங்க பிரதிநிதிகள் தங்களுக்கு ஏற்ப்படும் பாதிப்புக்களை தெளிவாக எடுத்து விளக்கினர் இந்த பாதிப்புக்களை வெளி மாவடட மீனவர்களும் ஏற்றுக்கொண்டனர் இங்கு கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன் வெளி மாவட்த்தில் இருந்து வருகை தந்து கடலட்டை தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீன்பிடி அமைச்சினால் வழங்கப்படடவாறு ஐந்து கடல் மயில் தொலைவிற்கு அப்பாலும் அதே வேளை இரவு வேளைகளில் இந்த தொழிலினை மேற்கொள்ள முடியாது என்ற இணக்கப்பாட்டுடன் இப்பிரச்சினைக்கு வடமராட்சி மீனவர்களின் பிரச்சினைக்கு பாதிப்பு இல்லாத வகையில் சுமூகமான ஒரு தீர்வு எட்டப்பட்ட்தாகவும் எதிர் காலத்தில் இப்படியான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு வடமராட்சி மீனவர்கள் இந்த கடலட்டை பிடிக்கும் தொழிலை ஊக்கி விப்பதற்கான நடவடிக்கைகளினை தான் விரைந்து மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார் .
மேற்ப்படி இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண அமைச்சர் , மாகாண சபை உறுப்பினர்கள் ,கடற்படை அதிகாரிகள் ,காவல்துறை அதிகாரி ஆகியோர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது .