நிதியமைச்சருக்கு எதிராக இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் வெற்றி பெறுவோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்காக அரசாங்கத்திலுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது வாக்குகளைப் பயன்படுத்தும் என அரசாங்க கட்சிகளின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான கயந்த கருனாதிலக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க கட்சியிலுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.