மகியங்கனை விவகாரம் :ஹக்கீம் அதிரடி

மகியங்கனையில் ஞானசார தேரரும், இன்னும் தேரர்கள் சிலரும், கடும் போக்காளர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை (21) முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டும் விதத்தில் நடந்து கொண்டதன் விளைவாக அந்தப் பிரதேசத்திலும், அயலூர்களிலும் வசிக்கும் முஸ்லிம்கள் மத்தியில் அச்சமும், பதற்றமும் நிலவி வருவதையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் சுட்டிக்காட்டியதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார். 

முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பங்கரகம்மன, ரோஹன, தம்பகொல்ல ஆகிய கிராமங்களில் மேலதிக பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மஹியங்கனை நகரில் கருப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு, கடையடைப்பும் நடந்துள்ளது. அந்தப் பின்னணியில், சத்தியாகிரகத்தில் ஈடுபட்டிருந்த தேரர்களுடன் அங்கு வந்த ஞானசார தேரரும் இணைந்து இன ரீதியான காரசாரமான கருத்துக்களை தெரிவித்ததை தொடர்;ந்து அமைதியின்மை தோன்றுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டது. 

இது பற்றி அங்கு வசிக்கும் வடரக்கே விஜித தேரரும் கவலை தெரிவித்திருக்கிறார். 

சென்ற மாதம் இப்பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படவிருந்த வேளையிலும், அமைச்சர் ஹக்கீம் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுடன் உடனடியாக தொடர்புகொண்டதன் பயனாகவும், இரு சமூகங்களை சேர்ந்த சமயத் தலைவர்கள், ஊர் முக்கியஸ்;தர்கள் ஆகியோரின் சமரச முயற்சியினாலும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருந்தது. 

இதேவேளை, மொனராகலை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதும் இரவு நேரத்தில் விஷமிகளால் கல் வீச்சு தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பிலும் அமைச்சர் ஹக்கீம் கவனம் செலுத்தி வருகின்றார். 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -