இலங்கை வரலாற்றில் இப்படியொரு இராஜாங்க அமைச்சர் - பிரதமர் ரனில்

பா.திருஞானம்-
லங்கை வரலாற்றில் முதற் தடவையாக அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு சேவையாற்றக் கூடிய கல்வி இராஜாங்க அமைச்சர் ஒருவர் உருவாக்கபட்டுள்ளார் - பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

தற்போது நாட்டின் கல்வி அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கபட்டு வருகின்றன. அதனை செய்வனே நிறைவேற்றுவதற்கு கல்வி அமைச்சரும் கல்வி இராஜாங்க செயற்பட்டு வருகின்றனர. இதில் இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அதிகாரங்களை பகிர்ந்து கொண்டு தமிழ் பிரிவிற்கு சேவையாற்றக் கூடிய கல்வி இராஜாங்க அமைச்சர் ஒருவர் உறுவாக்கபட்டுள்ளார் என்று கூறுகின்றார் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்கள். 

பருத்திதுறை ஹாட்லி கல்லூரிக்கு கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பஸ் ஒன்று அன்பளிப்பாக பாடசாலை மாணவர்களிடம் இன்று (06) பிரதமர் ரனில் விக்கரமசிங்க அவர்களினால் அரலி மாலிகையில் வைபரீதியாக கையளிக்கபட்டது. நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவகம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன். உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வட மாகாணசபை அமைச்சர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர் இதன் போதே மேற்படி கருத்தினை ஊடகங்களுக்கு பிரதமர் தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்கள். தற்போது நாட்டின் கல்வி அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கபட்டு வருகின்றன. அதனை செய்வனே நிறைவேற்றுவதற்கு கல்வி அமைச்சரும் கல்வி இராஜாங்க செயற்பட்டு வருகின்றனர். இவர்களில் தமிழ் கல்விக்கு ஒருவரும் சிங்கள கல்விக்கு ஒருவருமாக செயற்பட்டு வருகின்றனர். 

இதன் மூலம் நாட்டில் காணப்படும் அனைத்து பாடசாலைகளும் பாரபட்சம் இன்றி அபிவிருத்தி செய்வதற்கும் கல்வியில் மாற்றத்தை ஏற்படுவதற்கும் இலகுவாக இருக்கும். அன்மையில் நான் பருத்திதுறை ஹாட்லி கல்லூரிக்கு சென்றிருந்த போது பாடசாலைக்கு பஸ் ஒன்றை தருவதாக உறுதி அளித்திருந்தேன் அதனையே தற்போது நிரைவேற்று உள்ளோம் என கூறினார். இந்த விஜயத்தின் போது கல்வி இராஜாங்க அமைச்சரும் கலந்துக் கொண்டு ஹாட்லி கல்லூரியின் தொழில்நுட்ப பீடத்தை திறந்து வைத்தமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -