எஸ்.என்.எஸ்.றிஸ்லி,சுலைமான் றாபி-
அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் மாட்டுப்பள்ளைப் பிரதேசத்தில் இன்று (09) காலை ஏற்பட்ட வாகன விபத்தில் மோட்டார் போக்குவரத்துப் பொலிஸார் இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும், விபத்தில் காயமுற்ற மீனவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவத்தில் பாலமுனையைச் சேர்ந்த GC-3872 எனும் இலக்கமுடைய மீனவரின் மோட்டார் சைக்கிளும், BAS-0615 எனும் இலக்கமுடைய நெடுஞ்சாலை வீதிப் போக்குவரத்துப் பொலிசாரின் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதனாலயே இந்த விபத்து சம்பவம் நேர்ந்துள்ளது.
இந்த விபத்தால் மீனவரின் மோட்டார் சைக்கிளும், வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரின் மோட்டார் சைக்கிளும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இதேவேளை இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.