சாய்ந்தமருது சிம்ஸ் தனியார் பல்கலைகழகத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (04) சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் 250க்கும் மேற்பட்ட மாணவர்களினதும் அவர்களின் பெற்றோர்களினதும் பங்குபற்றளுடன் விமர்சையாக நடைபெற்றது.
சிம்ஸ் தனியார் பல்கலைகழகத்தின் பணிப்பாளர் நாயகம் அன்வர் எம் முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு சஹீல் ஹுசைன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். அங்கு உரையாற்றிய அவர் கிழக்கு மண்ணுக்கு தான் முதன்முறையாக விஜயம் செய்வதாகவும் இங்கு வாழும் மக்களின் நிலையை தனது கண்களால் கண்டுகொண்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அன்வர் முஸ்தபா அவர்களின் வேண்டுகோளை ஏற்று அதிக தொழிநுட்பத்துடன் கூடிய பல்கலைகழகம் ஒன்றின் கிளையை வெகுவிரைவில் கிழக்கு மாகாணத்தில் அமைத்து மாணவர்களின் கல்விக்கு உதவ தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கனடிய தூதரகத்தின் முகவர் நிறுவனமான கனடிய உலக பல்கலைகழக சேவைகள் நிறுவனத்தின் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கல்வி சார் துறைகளின் உயரதிகாரிகள், அதிபர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் என பெரும் திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.
கலைமகன் - கல்முனை நிருபர்