நிந்தவூரில் இடம்பெற்ற அர்-றப்பானிய்யா ஹதீஸ் பட்ட பின் டிப்ளோமா கற்கைநெறி பட்டமளிப்பு விழா..!

சுலைமான் றாபி-
ர் ரப்பானியா இஸ்லாமிய கலாபீடத்தினால் ஹதீஸ் பட்ட பின் டிப்ளோமா கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த 14 பேர்களுக்கான பட்டமளிப்பு விழாவும், நிந்தவூரில் காணப்படும் காபிழுகளுக்கான கௌரவிப்பு நிகழ்வும் கடந்த (03) வெள்ளிக்கிழமை நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. 

நிந்தவூர் பாத்திமா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபரும், அர் ரப்பானியா இஸ்லாமிய கற்கைகளுக்கான நிறுவகத்தின் அதிபருமான அஷ்ஷெய்க் அல்-ஹாபிழ் அலி அஹ்மத் (றஷாதி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பட்டமளிப்பு விழாவிற்கு இந்தியாவிலிருந்து வருகை தந்த அஷ்ஷெய்க் ரூஹுல் ஹக் (அர் றஷாதி) அவர்கள் கலந்து கொண்டு நாற்பதாயிரம் ஹதீஸ்களையும், அவற்றை கிரமந்தவறாது அறிவித்தவர்களது பெயர்களையும் கடந்த ஒரு வருடமாக அறிந்து மனதிலிருத்தி ஹதீஸ் கலைகளைப் கற்றுத் தேறியவர்களுக்கான பட்டங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டியதோடு, நிந்தவூரில் காணப்படும் 70ற்கும் அதிகமான ஹாபிழ்களையும், நிந்தவூரின் மூத்த உலமாக்களையும் பாராட்டி கௌரவித்திருந்தார். 

இதேவேளை நிந்தவூரில் இடம்பெற்ற ஹதீஸ் பட்டப்பின் படிப்பின் டிப்ளோமா கடற்கை நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான இப்பரிசளிப்பு நிகழ்வானது நிந்தவூர் வரலாற்றில் மிகவும் முக்கியமான சரித்திரமாக மாறியதோடு, நிந்தவூரில் முதன் முதல் முப்தி பட்டம் பெற்ற மௌலவி எம்.எச். மின்ஹாஜ் அவர்களும் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -