நட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள இலங்கைக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாசா நிறுவனத்தின் விசேட விஞ்ஞானியான டாக்டர் சரத் குணபால இதனை தெரிவித்துள்ளார்.
யடியான்தொட பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வளிமண்டலத்தில் வெப்பம் தொடர்ந்தும் அதிகரிப்பதனால், எதிர்வரும் காலங்களில் இயற்கை அனர்த்தங்கள் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். குறிப்பாக பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள இலங்கைக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படக்கூடும்.
அகவே அதற்கு முகம் கொடுக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.