ரஜினிகாந்த் தற்போது ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். ‘கபாலி’, ‘2.ஓ’ ஆகிய படப்பிடிப்புகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தால், ரஜினி கண்டிப்பாக ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அவருக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர்.
இதையடுத்தே, குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சென்று அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், ரஜினியின் உடல்நிலை குறித்து இணையதளம் ஒன்று வதந்தியை பரப்பியது.
இதையடுத்து, அந்த செய்தி சமூக இணையதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்தவுடன் ரஜினி குடும்பத்தை சேர்ந்தவர்கள் ரஜினி உடல்நிலை குறித்து வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி என்று கூறியுள்ளனர்.
அவர் அமெரிக்காவில் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து வெளிவந்த செய்திகளை யாரும் நம்பவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ஜுன் இறுதி வாரத்தில் அவர் அமெரிக்காவில் இருந்து திரும்புவார் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், ரஜினி உடல்நிலை குறித்து தவறான செய்தி வெளியிட்ட இணையதளத்தின் மீது சைபர் கிரைமில் புகாரும் கொடுத்துள்ளனர்.