மட்டக்களப்பு கெம்பஸுக்கும் மலேசியாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்குமிடையில் இன்று மாலை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இந்த உடன்படிக்கை ஊடாக மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திலே Islamic Banking and Finance, Islamic shareeah, Quran உட்பட இஸ்லாமிய ஷரீஆ தொடர்பான பல்வேறு பட்ட கற்கை நெறிகளுக்கு Master, PHD மற்றும் பட்டப்படிப்புக்கான சகல உதவிகளையும் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் மட்டக்களப்பு கெம்பஸின் Shareeah Faculty கான பல்வேறு பட்ட அனுபவங்களையும் அவர்களது பாடத்திட்டங்களையும் தருவதற்கும், எதிர்காலத்தில் தேவையான விரிவுரையாளர்களை தருவதற்கும் இணக்கம் தெரிவித்தது.
மேலும் இப் பல்கலைக்கழகம் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள Nottingham பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படுவதால் எங்களுடைய மாணவர்கள் நேரடியாக Nottingham பல்கலைக்கழகத்திலே இணைவதற்க்கும் ஏதுவாக இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கையில் இருக்கின்ற பட்டப்படிப்பை மேற்கொண்டவர்கள் Islamic Banking, Shareeah உட்பட மார்க்க விவகாரங்களில் முதுமாணி பட்டப்படிப்பு மற்றும் கலாநிதி பட்டத்தை மேற் கொள்ளவும் இணக்கம் காணப்பட்டது.
அவர்கள் மிகக் குறைந்த செலவிலே எமது பல்கலைக்கழகத்தினூடாக இந்த பல்கலைக்கழகத்திலே மேற்படிப்பை மேற்கொள்ள முடியும். இவ்வுடன் படிக்கையின் போது சுல்தான் பல்கலைக்கழகம் சார்பாக அதன் தலைவர் பேராசிரியர் டாக்டர் நூர்தீன் காதிர் அவர்களும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சார்பில் அல்ஹாஜ் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்களும் உப வேந்தர் S.M.இஸ்மாயில் அவர்களும், முகாமைத்துவப் பணிப்பாளர் அஹமட் ஹிறாஸ் ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கலந்து கொண்டார்கள்.