காரைதீவு நிருபர் சகா-
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவத்திற்கு குமண கானகத்தினூடாகச் செல்கின்ற பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை நாளை 27ஆம் திகதி திறக்கப்பட்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி மூடப்படும்.
நாளை அதற்கான சம்பிரதாயபூர்வ வைபவம் ஆலயத்தில் நடைபெறும். அதிகாலையில் விசேட பூஜை நடைபெற்று குமண சரணாலயத்திற்க முன் காட்டுப்பாதை திறந்துவைக்கப்படும். இதில் மொனராகல அம்பாறை அரச அதிபர்கள் கலந்துகொள்வார்கள்.
கதிர்காம ஆடிவேல்விழா உற்சவம் ஜூலை 5ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21ஆம் திகதி தீர்த்தத்துடன் நிறைவடையும். அதேபோல் உகந்தமலை முருகனாலயத்தின் ஆடீவேல்விழா உற்சவமும் இடம்பெறும்.