இக்பால் அலி-
இந்நாட்டில் நிலவிய சீரற்ற நிலை காரணமாக வெள்ளத்த்தால் பாதிக்கப்பட்ட மெகொட கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தால் பாமிக்கப்பட்ட 1250 சிங்கள, தமிழ் முஸ்லிம் குடும்பங்களுக்கு அக்குரணை ஜம்மிய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டில் பள்ளிவாசல்கள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து 10000 ரூபா பெறுமதியான கேஸ் அடுப்பு, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மெகொட கொலன்னாவ ரஹ்மா ஜும்ஆப் பள்ளிவாசலில் கொலன்னாவ அனைத்துப் பள்ளிவாசல்களின் தலைவர் எம்.வை.எம் ஹனிபா தலைமையில் 9-06-2016 நடைபெற்றது.
இந்நிகழ்வில் கொலன்னாவ பொலிஸ் பொறுப்பதிகாரி, கொலன்னா விஹாராதிபதி, அக்குரணை ஜம்மிய்யதல் உலமா சபையின் தலைவர் அஷ;nஷய்க் எம்.ஏ.எம்.சியாம், அக்குரண ஜம்மிய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள், வர்த்தகப் பிரமுகர்களான தொழிலதிபர் டி.எஸ்.எம். நிசைஹ்ஹார், எஸ்.ஏச்.எம்.அத்தாஸ். எஸ்.ஏச்.எம் ரம்ஸீன் உள்ளிட்டவர்கள் கலந்து பொருட்களை வழங்கி வைப்பதைப் படங்களில் காணலாம்.