நாடளாவிய ரீதியில் 1000 Wi-Fi வலயங்கள்



லங்கையில் இலவசமாக Wi-Fi பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1000 Wi-Fi வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொழிநுட்ப தொடர்பாடல் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இலவசமாக Wi-Fi வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் அதிகமான பிரதேசங்களுக்கு Wi-Fi இணைப்பை வழங்கிய ஒரே ஒரு மற்றும் முதலாவது ஆசிய நாடு என்ற பெருமையை இலங்கைக்கு கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த இலவச Wi-Fi திட்டத்தினால் ஒரு நபருக்கு 100 மெகாபைட் இலவசமாக கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -