இறக்காமத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கக்கோரி தனி நபர் பிரேரனை - உதுமாலெப்பை MPC

சலீம் றமீஸ்-
ம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட இறக்காமம் பிரதேச கல்விக் கோட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபையினை கோரும் தனி நபர் பிரேரனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையினால் சமர்ப்பிப்பு.

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட இறக்காமம் பிரதேச கல்விக் கோட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சபையினை கோரும் தனி நபர் பிரேரனை கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது, சம்மாந்துறை கல்வி வலயத்தில்; கஷ்டப் பிரதேசமாகவுள்ள இறக்காமம் கல்விக் கோட்டத்தில் 12 பாடசாலைகள் அமைந்துள்ளது. இப்பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ளதால் இப்பிரதேச கல்வி அபிவிருத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக இப் பிரதேச மக்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

இறக்காம பிரதேச பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இந்த வருடம் (2016 இல்) கல்விக் கல்லுரிகளிலிருந்து பயிற்சி பெற்று வெளியாகவுள்ள இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை இறக்காமம் பிரதேச பாடசாலைகளுக்கு நியமனம் செய்வதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், 

தற்போது வெளியூர் பாடசாலைகளில் கடமையாற்றும் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை இறக்காமம் கோட்டப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கி இறக்காமம் பிரதேச கல்விக் கோட்டப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்யுமாறு மத்திய அரசாங்க கல்வி அமைச்சரிடம் கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடுக்க வேண்டும் என்று கோருவதுடன், 

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இறக்காம பிரதேச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையும் விடுத்து இத்தனி நபர் பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் எதிர்வரும் 24 ஆம் திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த தனிநபர் பிரேரனை கடந்த 2016.04.26ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்படவிருந்த வேலை சபை ஒத்தி வைக்கப்பட்டதனையடுத்தே இத் தனிநபர் பிரேரனை இம்மாதம் 24ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -