‘ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை” ஹாபிஸ் நசீர்

ஜே.எப்.காமிலா பேகம்-

“மட்டக்கிளப்பு மாவட்டம் யுத்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட, வறுமைக்கோட்டிட்கு கீழ் வாழும் மக்கள் வாழும் ஒரு மாவட்டமாகும். இதனை மாற்ற வேண்டிய தேவைப்பாடு எம்க்கு இருக்கிறது” என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் நேற்றி  (26) தெரிவித்தார்

வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்குற்பட்ட, நாசிவன்தீவு குடிநீர் திட்டம் மற்றும் நூலக கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று இடம்பெற் றபோதே ,முதலமைச்சர் அங்கு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கிழக்கு மாகாண . சபை முன்னாள் உறுப்பினர் ம.இஸ்மாயில்,முஸ்லிம் காங்கிரெஸ் ஹைகமான்ட் உறுப்பினர் எம்.எம்.ரியால். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாருக்,கிழக்கு விவசாய மீன்பிடி அமைச்சர் துரைராஜசிங்கம் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலக செயலாளர் ச.ஷஹாப்தீன் உற்பட பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் முதலமைச்சர் தொடர்ந்து கூறுகையில்;

”யுத்தத்துக்கு முன்பு மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த வரலாறு பல இருப்பினும் ,சில திட்டமிடப்பட்ட குழுக்களின் சதியால் ,பிரிக்கப்பட்ட சமூகங்களாக இருக்கின்றோம்.பாடசாலைகள் கூட தமிழ்,முஸ்லிம் சிங்களம் என பிரிக்கப்பட்டுள்ளன.

பின்னிப்பிணைந்து வாழ்வதற்குரிய சூழலை அரசியல் தலைவர்கள் மத்தியில் இன்று கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தி இருக்கிறோம்.சகல கட்சிகளும் சேர்ந்து ,ஒரு நல்லாட்சியை உருவாக்கி உள்ளோம்.ஊழல் என்ற சொல்லுக்கே இடமில்லை .ஒவ்வொரு சதத்தையும் மக்களுக்காக செலவளிக்கிறோம்” என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -