அப்துல் ரஷாக்-
கொடகே நிறுவனமும் இலங்கை வானொலியும் இணைந்து நடத்திய மூத்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விருது கடந்த 24. 05.2016 அன்று இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபன ஆனந்த சமரகோன் உள்ளக அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிக்கு பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக அவர்கள் தலைமை வகித்தார்.
இவ்விழாவில் 15 சிங்கள -தமிழ்-முஸ்லிம் எழுத்தாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இதில் தமிழ்-முஸ்லிம் எழுத்தாளர்களான அந்தனி ஜீவா, ஆனந்தி, மேமன்கவி ஆகியோரும் கௌரவிக்கப்பட்டார்கள். இவ்விழாவில் வரவேற்புரையை இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் சட்டத்தரணி நந்த முருத்தெட்டுவேகம நிகழ்த்தினார். வாழ்த்துரையை இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகம் ஏராநந்த ஹெட்டியாராச்சி நிகழ்த்தினார்.
சிறப்புரைகளை பேராசிரியர் ஜே.பீ. திஸாயக்க, எழுத்தாளர் திக்குவல்லை கமால் ஆகியோர் ஆற்றினார்கள்.
கௌளரவிக்கப்பட்ட சிங்கள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் விபரங்கள் அடங்கிய மலர் ஒன்று இவ்விழாவில் வெளிப்பட்டது. மூன்றாவது வருடமாக நடத்தப்பட்ட கொடகே நிறுவனமும் இலங்கை வானொலியும் இணைந்து நடத்தி வரும் மூத்த எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விருது வழங்கும் இவ்விழாகளில் நீண்ட காலமாக சிங்கள-தமிழ் கலை இலக்கியத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றி வரும் சிங்கள-தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்கள் மிக சிறப்பான முறையில் கௌரவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









