வெல்லம்பிட்டியில் அமைச்சர் றிஷாட்டின் நடவடிக்கை..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
டந்த சில தினங்களாக ஏற்பட்டிருந்த சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் பல இலட்சக் கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்து உறவினர்களின் வீடுகளிலும், பாடசாலைகள், பள்வாசல்கள், விகாரைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவ்வாறு தஞ்சமடைந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், உணவு வகைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறுபட்ட தனியார் அமைப்புக்கள், சங்கங்கள், மத ஸ்தாபனங்கள் உடநடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன.

இந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் வெல்லம்பிட்டி உள்ளிட்ட தாழ் நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களுக்கான உலர் உணவு மற்றும் ஏனைய பொருட்களை வழங்குவதற்கு ஏனைய பள்ளிவாசல்கள், நலன் விரும்பிகளின் உதவிகளுடன் கிடைக்கும் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளில் கொலன்னாவைப் பள்ளிவாசல் நிருவாகம் ஏனைய பள்ளிவாசல்களின் நிருவாகங்களுடன் இணைந்து ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட படங்கள்.

நேற்றும், நேற்று முன்தினமும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் படாசாலைகளில் தஞ்சமடைந்த மக்களைப் பார்வையிட்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதாக குறிப்பிட்டதுடன் மக்களின் நலன் கருதி கொலன்னாவைப் பள்ளி நிருவாகம் பாரிய அர்ப்பணிப்புடன் உலர் உணவு வகைகளை சேகரித்து அதனை வழங்க எடுக்கும் நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். 

இதன்போது மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், மற்றும் அமைச்சரின் அதிகாரிகளும் சென்றிருந்தனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -