இக்பால் அலி-
மாவத்தகம செயலாளர் பிரிவில் வரத்தன மலையிலுள்ள பகுதி மண்சரிவு அபாயத்திற்குரிய வலயமாக தேசிய கட்டிட ஆய்வு மையத்தினால் இனங்காணப்பட்டுள்ளதாக பிரகடனப்படுத்தப்பட்டு அம் மக்களை இடம்பெயர்ந்து செல்லுமாறு இன்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந் நாட்டில் நிலவும் சீரற்ற நிலை காரணமாக மாவத்தகம செயலாளர் பிரிவில் வரத்தன மலையிலுள்ள பகுதி மண்சரிவு அபாயத்திற்குரிய வலயமாக தேசிய கட்டி ஆய்வு மையத்தினால் இனங்காணப்பட்டுள்ளதால் இந்தப் பகுதியில் வாழும் மக்களை இடம்பெயர்ந்து செல்லுமாறு மாவத்தகம பிரதேச செயலகத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் 30 குடும்பங்கள் வாழுகின்றனர். இவர்கள் அனைவரையும் இரு முகாம்களில் தங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோரான விஹாரை மற்றும் வரத்தன பாடசாலைகள் ஆகிய இரு இடங்களில் இவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிக்கு மாவத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. டி. டி லலித் மற்றும் அனர்த்த முகாமைத்து நிலைய உதவி அதிகாரி, கிராம உத்தியோகஸ்தர் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி, பொருளாதார அபிவிருத்தி அதிகாரி உள்;ளிட்ட வர்கள் களத்திற்கு சென்று மக்களை வெளியேறும் படி வலிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.
மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் பட்சத்தில் இந்தப் பகுதிக்கு உடன் பாதுகாப்பு வழங்கவுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி அம்மக்களிடம் வலியுறுத்திக் கூறினார்.
தொடர்புகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அதிகாரி 0782465818-0772266235