எப்.முபாரக்-
இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் சந்தைக்கு கிடைக்கும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மரக்கறிகளின் விலை நூற்றுக்கு 25 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் யு.ஆர்.தயானந்த அறிவித்துள்ளதாக மரக்கறி கொள்வனவு செய்யும் முதலாளிமார்கள் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலையினால் மரக்கறி செய்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் நட்களில் மரக்கறிகளின் விலை மேலும் உயர்வடையக் கூடும் என அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ கறிமிளகாய் 230 ரூபாவிற்கும், ஒரு கிலோ பீட்ருட் 110 ரூபாவிற்கும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 200 ரூபாவிற்கும், ஒரு கிலோ தக்காளி 110 ரூபாவிற்கும், ஒரு கிலோ கரட் 100 ரூபாவிற்கும், ஒரு கிலோ கத்தரிக்காய் 100 ரூபாவிற்கும், ஒரு கிலோ கோவா 80 ரூபாவிற்கும், ஒரு கிலோ லீக்ஸ் 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் அறிவித்ததாக முதலாளிமார் தெரிவிக்கின்றனர்.