பா.திருஞானம்-
மண்சரிவினால் பாதிக்கபட்டுள்ள கேகாலை மாவட்ட தோட்ட மக்களை பார்வை இடுவதற்காக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயம் ஒன்றினை மேற் கொண்டார். அதன் போது தெஹியோவிட்ட டெனிஸ்வர்த் தோட்ட மக்களை சந்திப்பதற்காக சென்ற போது மக்கள் தங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை கட்டிதருமாறு கோரிக்கைவிடுத்தனர்.
இதன் போது மக்களிடம் உரையாடிய அமைச்சர் அவர்கள். நாங்கள் நுவரெலியாவில் இருந்தாலும் உங்களை மறக்கவில்லை. உங்களுக்கும் இந்த மாவட்டத்தில் பாதிக்கபட்ட ஏனையவர்களுக்கும் எங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வோம்.
உங்களுக்கு நீங்கள் கேட்கின்ற மாதிரி பாதுகாப்பான இடங்களில் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். நீங்கள் கைவிடப்பட்டவர்கள் அல்லர் நுவரெலியா உரவுகள் என்றும் உங்களுடன் இருக்கும் என்று கூறினார்.



