கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவமான பதவியொன்றை வகிப்பதால் அவருக்கு அநீதி ஏற்படாத வகையில் சம்பூர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டுமென பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
வெசாக் பந்தல் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் படைவீர்களின் கௌரவத்தைப் பாதுகாப்பது சகலரினதும் பொறுப்பாகும்.
கடற்படை அதிகாரிக்கு அநீதி நடந்திருந்தால் அதை அனுமதிக்க முடியாது.
அதேவேளை இங்கு ஏதும் தவறு நடந்திருந்தால் அதனை நிவர்த்திக்க வேண்டும்.
கிழக்கு முதலமைச்சருக்கும் அநீதி ஏற்படாதவாறு இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றார்.