கண்டி, மடவல மதீனா தேசிய பாடசாலையில் சிங்கள மற்றும் தமிழ் ஆசிரியர்களை வெளியேற்றுவதற்கான எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படுவதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“முஸ்லிம் அல்லாத சகல ஆசிரியர்களும் உடன் விலகுக, இல்லாது போனால் விளைவு மோஷமாகும் ! என அச்சுறுத்தல் விடுக்கும் கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் நடைபெற்ற பெற்றார் கூட்டத்தின் போது சிங்கள, தமிழ் ஆசிரியர்களுக்கு அழுக்கடைந்த முட்டைகளினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் தரவேற்றப்பட்டுள்ளன எனவும் குறித்த சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முகநூல் பக்கத்தில் இது தொடர்பான தகவல்களை அமில ஆர். பனங்கள என்பவர் குறிப்பிட்டுள்ளார். இவரின் மனைவியும் இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் என அவர் கூறியுள்ளார். தற்பொழுது, அவரது மனைவியை இந்தப் பாடசாலையிலிருந்து விலக்கிக் கொள்ள முயற்சி எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவர் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கடிதம் மற்றும் இதனுடன் சம்பந்தப்பட்ட தகவல்களை குறித்த ஊடகங்கள் பின்வருமாறு பதிவேற்றம் செய்துள்ளன. dc