தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கெடுப்பு கடந்த மே 16 ஆம் திகதி முதல் நடைபெற்றது. இன்று வியாழக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக கூட்டணி தற்போதைய நிலைவரப்படி 126 இடங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிகின்றன.
அதேவேளை திமுக கூட்டணி 96 இடங்களிலும் பா.ம.க 4 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக செதெரிவிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் என்பது தெளிவாகியுள்ளது. இந்நிலையில் இந்திய பிரதமர் ஜெயலலிதாவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
