நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடன் கூடிய வானிலை நிலவும் சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தாழமுக்க நிலைமை தற்போது காங்கேசன்துறையிலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதால் இன்றும் மழையுடன் கூடிய வானிலையை எதிர்பார்க்க முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தாழமுக்க நிலைமை எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் சுழல் காற்றாக வலுவடையும் சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.
இந்த சுழல் காற்று இலங்கையை ஊடறுத்துச் செல்கின்றமையினால் மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் கடும் மழையுடன் கூடிய வானிலையை எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.